விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.
வாரிசு படத்தை வம்சி இயக்கியுள்ளார். துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். துணிவு மற்றும் வாரிசு படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படங்களின் டிக்கெட் முன்பதிவு பணிகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே வாரிசு மற்றும் துணிவு படத்திற்கான சிறப்பு காட்களை தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது. அதே சமயம் பிரம்மாண்ட கட் அவுட் மற்றும் பாலாபிஷேகத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.