தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போல் வெளியான புகைப்படம்தான் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேரனும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருப்பவர், இவர் கால்பந்து போட்டிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளிநாடு சென்றிருந்தார். அவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையம் சென்று வழியனுப்பி வைத்தார். உதயநிதி தமிழக அமைச்சரானதை தொடர்ந்து அடுத்து இன்பநிதி அரசியலுக்கு வர இருப்பதாகவும், அவரும் முதலமைச்சர் ஆவார் என எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதைவிட ஒரு படி மேலே போய், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், ‘இன்பன் உதயநிதி வந்தாலும் வரவேற்போம்’ என்று சேலத்தில் பேசி அதிரடியைக் கிளப்பினார்.

இந்த நிலையில் இன்பநிதி தனது பெண் நண்பருடன் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியிருந்தது. இந்த புகைப்படம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பாஜக மற்றும் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் இந்த புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர். ‘வருங்கால அண்ணியாரே…’ என அ.தி.மு.க.வினர் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த புகைப்படத்திற்கு பதில் அளிக்கும் வகையில் இன்பநிதியின் தாயார் கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘‘காதலிப்பதற்கும், காதலை வெளிப்படுத்துவதற்கும் அச்சம் அடைய வேண்டாம். இயற்கையை அதன் முழு மகத்துவத்தோடு புரிந்துகொள்ள இதுவும் ஒரு வழி’’ என்று தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த பதிவு எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal