ஈரோடு கிழக்கிற்கு இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக தேர்தல் அதிகாரி பதிலளித்துள்ளார்!
இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் வெளியிட்டார். நவம்பர் 9ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
‘‘தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின் படி 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 3.04 கோடி ஆண், 3.12 கோடி பெண் வாக்காளர்கள்; 8,027 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர் உள்ள தொகுதி சென்னை துறைமுகம். 1.7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இரண்டாவது பெரிய தொகுதியாக கவுண்டம்பாளையத்தில் 4.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 3.82 கோடி வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். 1500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் அமைத்து வருகிறோம். அதற்கு மேல் சென்றால் கூடுதல் வாக்குச்சாவடி அமைக்கப்படும். திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதில் பெறலாம். இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்பட்டாலும் தொடர்ந்து வாக்காளர் பெயர் சேர்க்கும் செய்யலாம். 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம், 18 வயதாகும் போது பெயர் சேர்க்கப்படும்’’ என்றார்.
மேலும், ‘‘தேர்தல் ஆணையத்தில் கொடுத்த முகவரியின் அடிப்படையிலேயே அதிமுகவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது’’ என ஒருங்கிணைப்பாளர்கள் எனக்குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவெரா திருமகன் மரணம் நேற்றைய தினம் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்னும் சில மாதங்களில் இடைத்தேர்தல் வர உள்ளது. பொதுவாக ஒரு எம்எல்ஏ இடம் காலியானால் 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்படும். தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை செய்துவிட்டு, தேதி முடிவு செய்யப்படும். இந்த நிலையில் ஜூன் மாதத்திற்குள் தற்போது காலி ஆகி இருக்கும் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.
இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி என்பதை தேர்தல் ஆணையம் எம்எல்ஏ சீட் காலியானதாக அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு நடத்தப்பட்ட தீர வேண்டும். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இந்திய தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவித்த பின்னர் ஆறுமாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார்.