பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்க்கு வாய்ப்பே இல்லையென மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜகவிற்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜகவை சேர்ந்த வானிதி சீனிவாசன், காந்தி, சரஸ்வதி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 4 பேர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக ஆன நிலையில் மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதனையடுத்து திமுக- பாஜக இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்காள இருந்த பென்.ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன். எச்.ராஜா வானதி சீனிவாசன் ஆகியோர் புறக்கணிக்கப்படுவதாக தகவல் வெளியானது.

இதற்க்கு பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை தான் காரணம் என பாஜகவினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாகவும், தேசிய மகளிரணி தலைவராக பதவி வகித்து வரும் வானதி சீனிவாசன் திமுகவில் இணைய உள்ளார் என சவுக்கு சங்கர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அவரது டுட்டர் பக்கத்தில், கட்சி தலைமை தொடர்ந்து புறக்கணித்து வருவதால் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேர வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் வடதமிழகத்தின் தலைவர் பதவியில் இருந்து தமது கணவர் சு.சீனிவாசன் அண்மையில் நீக்கப்பட்டதால், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீதும் வானதி சீனிவாசன் கோபத்தில் இருப்பதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதனை மறுக்கும் வகையில் வானதி சீனிவாசன் கூறும் போது,

‘‘எனக்கு கட்சி தலைமை தேசிய பொறுப்புகளை வழங்கி கவரவித்துள்ளது. எனது கணவரை வி.எச்.பி.யில் தேசிய இணை பொறுப்பாளராக பதவி உயர்வு அளித்துள்ளது, அதனால் தான் மாநில பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

தமிழ்நாட்டில் கட்சியின் பெயர் தெரியாத காலத்தில் இருந்து கட்சியில் உள்ளோம். இதுபோன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ள வானதி நாங்கள் என்றும் பாஜகதான்’’ என கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal