சென்னை செங்குன்றத்தை அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், நான் உணவகம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். மேலும் நான் சார்ந்த பகுதியில் உள்ள பெண்களுக்கு சிறு சிறு மகளிர் குழுக்கள் மூலம் கடன்களையும் பெற்றுக் கொடுக்கிறேன்.

அந்த வகையில், அதே பகுதியில் உணவகம் ஒன்றில் சமையலராக பணியாற்றி வரும் சுரேஷ் குமாருக்கும் கடன் பெற்றுக் கொடுத்தேன். ஆனால், அவர் தவணைத் தொகையை முறையாக செலுத்தவில்லை. அவரிடம் பலமுறை அறிவுறுத்தியும் தொடர்ந்து மெத்தனம் காட்டி வந்தார்.

இந்நிலையில் ஒரு நாள் என்னை போணில் தொடர்பு கொண்ட சுரேஷ்குமார் பணம் முழுவதையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும், அதனை நேரில் வந்த பெற்றுச் செல்லுமாறும் கூறினார். இதனைத் தொடர்ந்து அவர் தங்கியிருந்த அறைக்கு நான் சென்றேன். அப்போது அவர் எனக்கு கொடுத்த மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை இயல்பாக அருந்தினேன். அதில் மயக்க மருந்து கலக்கப்பட்டது எனக்கு தெரியாது. பின்னர் உடனடியாக மயக்கமடைந்து விட்டேன்.

நான் மயக்கமடைந்ததை பயன்படுத்திக் கொண்ட சுரேஷ் குமார் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். மேலும் அதனை செல்போனில் படமாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி என்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் வீடியோவை காட்டி என்னிடம் பணம் பறிக்கவும் முற்பட்டார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்த வீடியோவை எனது வீட்டிற்கு அனுப்பி தொந்தரவு செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

புகாரைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சுரேஷ் குமாரை செல்போன் சிக்னலை பயன்படுத்தி கண்டுபிடித்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal