ஒரு நாட்டின் பிரதமர், தனது தாயை சாதாரண பாடையில், காலில் செருப்பு அணியாமல் சுமந்து செல்வதுதான் பார்ப்போரின் கண்களை கலங்க வைத்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

இன்று, வெள்ளிக்கிழமை அதிகாலையில் பிரதமரின் தாய் காலமானார். அவரது இறப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே, பிரதமர் மோடி தன் தாயை இறுதிச் சடங்குக்காக மயானத்திற்குத் தூக்கிச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில் பிரதமர் மோடி தன் கால்களில் செருப்பு அணியாமல் துக்கத்துடன் தாயைத் தோளில் தூக்கிச் செல்லும் காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. பலரும் அதனை பகிர்ந்து பிரதமருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறிவருகிறார்கள்.

“ஒரு புகழ்மிக்க நூற்றாண்டு இறைவனின் காலடியில் இளைப்பாறுகிறது. என் தாயிடம் ஒரு துறவியின் பயணத்தையும், சுயநலம் இல்லாத கர்மயோகிக்கு உரிய அடையாளத்தையும், உயர்ந்த மதிப்பீடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையும் நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.” என்று பிரதமர் மோடி ட்விட்டர் பதிவு ஒன்றில் உருக்கமாக அஞ்சலி தெரிவித்துள்ளார்.

சாதாரண ஒரு அரசியல்வாதியின் தாயோ… உறவினர்களோ இறந்தால்…. ‘தங்க ரதம்’ போல் அழகு படுத்திய தேரில் உடலை எடுத்துச்சென்று தகனம் செய்வதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால்… ஒரு நாட்டின் பிரதமர், தனது தாயை சாதாரண ‘பாடை’யில் சுமந்து சென்றதுதான் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal