மிகுந்த எதிர்பார்ப்பு அரசியல் பரபரப்புகளுக்கு இடையே அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு வருகின்ற திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு தரப்பினரும் மிகுந்த பரபரப்புடன் விசாரணையை எதிர்நோக்கி இருக்கின்றனர். கடந்த முறை விசாரணைக்கு வந்த போது அதிமுக பொது குழு வழக்கு விசாரணை நடந்தபோது பழனிச்சாமி தரப்பு என்னென்ன நிவாரணங்களை எதிர்பார்க்கிறீர்கள் என்பது குறித்து இடைக்கால மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் கால அவகாசம் கூறிய ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் புதிய இடைக்காலம் ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் உள்ள அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது இதை அடுத்து தேர்தல் தேதி எப்போதும் வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால் ஓபிஎஸ் இரட்டை இலை தொடர்பாக இடைவு செய்யக்கூடாது என உத்தரவிட கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதற்கு ஓபிஎஸ் தரப்பில் விளக்கம் என்று தனியாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் இரு தரப்பு விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பொதுக்குழு கூட்டப்பட்ட நடைமுறை மற்றும் தீர்மானங்கள் சட்ட விதிகளை மீறியது என ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அதிமுக பொது குழு தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் வருகின்ற ஜனவரி நான்காம் தேதி அதாவது திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு இந்த வழக்கில் விசாரணையானது நடைபெற இருக்கிறது.
இதற்கிடையே பாஜக ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து இபிஎஸ் தரப்புக்கு மாறி உள்ள நிலையில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என இரு தரப்புமே ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கின்றனர். அதே நேரத்தில் திங்கட்கிழமை நடைபெறுவது இறுதி விசாரணை இல்லை எனவும் இன்னும் சில நாட்கள் தீர்ப்பு தள்ளி போகலாம் எனவும் மற்றொரு தகவலும் உலாவுகிறது.
இதற்கிடையே, மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமியை ‘பொதுச்செயலாளர்’ என குறிப்பிட்டு கடிதம் எழுதியதை, இ.பி.எஸ். ஆதரவாளர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இந்த நிலையில்தான், இன்று ரிமோட் வாக்கு பதிவு குறித்து மாநிலங்கள் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது. அதாவது, டெல்லியில் வருகிற 16&ந்தேதி இது தொடர்பான விளக்கக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அழைப்புதான் எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. காரணம், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி பழனிசாமி என இருவருக்கும் இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது.
வருகிற திங்கட்கிழமை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வர இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்திடம் இருந்து இப்படி யொரு கடிதம் வந்திருப்பது அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.