கர்நாடக மாநிலம் மைசூர் அருகே பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி குடும்பத்துடன் காரில் சென்ற போது அந்த கார் திடீரென விபத்துக்குள்ளானதில் அவர் லேசான காயமடைந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டத்தில் உள்ள பந்திபுரா பகுதியில் தனது குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பிரஹலாத் மோடி சென்ற காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் இந்த விபத்தில் பிரஹலாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரஹலாத் மோடியின் கார் விபத்துக்குளானதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்துக்குள்ளான காரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal