உலகத்தையே உள்ளங்கையில் அடக்கிவிட்டது செல்போன்! வங்கிக்கு பணம் எடுக்க செல்லவேண்டாம்… தியேட்டருக்கு டிக்கெட் வாங்க செல்லவேண்டாம்… இப்படி செல்போன்கள் நம் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாக மாறி ஆண்டுகள் கடந்துவிட்டன!

உண்மைதான்… இப்படி பல நல்ல விஷயங்களுக்கு பயன்படும் அதே செல்போன்கள்… மாணவ, மாணவிகளின் வாழ்க்கையையும் சீரழித்துவிடுகிறது. செல்போன்களில் தங்களை அழகழகாய் படம் பிடித்து ரசிக்கும் இன்றைய இளம் பெண்கள் பலர், அதன் பின்னால் ஒளிந்து கிடக்கும் பேராபத்தை எப்போதுமே உணர்வதில்லை. குறிப்பாக இன்றைய இளம்பெண்கள் மத்தியில் செல்போன் மோகம் என்பது எல்லை மீறும் அளவுக்கு சென்று விட்டது என்று எச்சரிக்கிறார்கள் சைபர் கிரைம் போலீசார்.

விளையாட்டாக எடுத்துவிட்டு அதனை பார்த்து ரசித்த பின்னர் அழித்து விட்டால் எதுவும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு இன்றைய இளம் பெண்கள் பலர் தங்களை எப்படியெல்லாம் படம் பிடிக்க கூடாதோ அப்படி எல்லாம் படம் பிடித்தும் வீடியோக்களை பதிவு செய்தும் ரசித்து வருகிறார்கள். குறிப்பாக சினிமா கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் வகையில் தங்களை விதவிதமாக வீடியோவில் பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் இணைய தளங்களின் பக்கம் நாம் சாதாரணமாக உலாவினாலே போதும், விதவிதமான வீடியோக்கள் வந்து விழுகின்றன. நாம் தேடிச் செல்லாமலேயே இணைய தளங்கள் மூலம் ஏராளமான ஆபாச வீடியோக்களை பார்க்க முடிகிறது. குறிப்பாக கணவன்- மனைவி இருவரின் அந்தரங்க விஷயங்களை ஊரே பார்க்கும் வகையிலான வீடியோக்களும் கண்ணை கூச செய்யும் வகையில் குவிந்து கிடக்கின்றன. இது போன்ற வீடியோக்கள் சமீப காலமாகவே சமூக வலைத் தளங்களை அதிகமாக ஆக்கிரமித்து வருகின்றன.

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் செல்போன்களில் யூடியூப் வீடியோக்களை பார்ப்பதை பொழுது போக்காகவே கொண்டு உள்ளனர். இது போன்ற நேரங்களில் நல்ல விஷயங்களை தேடி இளைஞர்கள் பார்த்தாலும் ஏதோ ஒரு வகையில் அவர்களை சுண்டி இழுக்கும் கவர்ச்சிகரமான வீடியோக்களையும் காண நேரிடுகிறது. இப்படி இளைய சமூகம் கெட்டுப் போவதற்கு ஆபாச இணையதளங்கள் பெருமளவில் பெருகி கிடக்கின்றன. இது தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஆபாச இணைய தளங்களை மத்திய-&மாநில அரசுகள் முடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு 800 ஆபாச இணைய தளங்களும் கடந்த ஆண்டு 60 இணைய தளங்களும் முடக்கப்பட்டு இருக்கின்றன. இந்த எண்ணிக்கை என்பது பெருங்கடலில் ஒரு குடம் தண்ணீரை அள்ளியது போன்று தான் என்கிறார்கள் இணையதளவாசிகள். அந்த அளவுக்கு உலகம் முழுவ திலும் இருந்து இயக்கப்படும் ஆபாச இணையதளங்களில் கோடிக்கணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இது போன்ற இணைய தளங்களை முடக்கி வைப்பது என்பது நாடு முழுவதுமே சைபர் கிரைம் காவலர்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. ஒரு இணையதளத்தை முடக்கினால் புதிதாக நூறு இணைய தளங்கள் புற்றீசல்கள் போல முளைக்கின்றன.

இதனால் இது போன்ற இணையதளங்களை இனி முற்றிலுமாக முடக்க முடியுமா? என்பது பெரிய கேள்வியாகவே எழுந்துள்ளது. ஆபாச வீடியோக்களை பொருத்த வரையில் ஒரு காலத்தில் அது மிகவும் ரகசியமான தாகவே இருந்து வந்தது. கேசட் மற்றும் சிடி வடிவில் இருந்து வந்த இந்த வீடியோக்கள் தற்போது நாம் பயன்படுத்தும் செல்போன்களில் நம் கண் முன்னே விரிந்து கிடக்கிறது. எனவே இன்றைய இளம் தலைமுறை மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கிறார்கள்.

குறிப்பாக நாம் விளையாட்டுக்காக எடுக்கும் வீடியோக்கள் கடைசியில் வினையில் போய் முடிந்து விடும். எனவே எக்காரணம் கொண்டும் கவர்ச்சிகரமாகவோ ஆபாசமாகவோ இளம் பெண்கள் வீடியோக்களை பதிவு செய்யக் கூடாது என்பது போலீசாரின் தொடர் அறிவுரை யாகவே இருந்து வருகிறது. ஆனாலும் இன்றைய இளம் பெண்கள் அதனை பெரிதாக கண்டு கொள்வதில்லை. இணைய தளங்களில் உலா வரும் ஆபாச செல்பி வீடியோக்களே இதற்கு மிகப்பெரிய உதாரணமாக உள்ளன.

தொழில் ரீதியாக தயாரிக்கப்படும் ஆபாச வீடியோக்களுடன் குடும்ப பெண்கள் இருக்கும் ஆபாச வீடியோக்களும் போட்டி போட்டுக் கொண்டு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. வேறு ஒரு காரணத்தையும் சொல்கிறார்கள் யூடியூபில் அதிகம் பேர் பார்த்தால் பணம் கிடைக்கிறது என்பதால், பலர் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை வெளியிடுகின்றன. இந்த வீடியோக்களை பார்க்கும்போது இப்படியும் வீடியோக்கள் எடுக்க முடியுமா? என்று சைபர் கிரைம் போலீசார் வேதனையோடு பல்வேறு தகவல் களை தெரிவித்து உள்ளனர்.

எனவே, பள்ளி மாணவ, மாணவிகள் முதற்கொண்டு குடும்ப பெண்கள் வரை ‘சொல்போன்’ மோகத்தில் சிக்குவதுதான் அவர்களது எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிடும் என்பதை இனியாவது உணரவேண்டும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal