கணவனின் கண்முன்னே, நண்பர்களால் மனைவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்தான் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

தெலங்கானா மாநிலத்தின் மேடக் மாட்டத்தில் உள்ள மாசைப்பேட்டை நகரை சேர்ந்தவர் 48 வயதான தாடேபள்ளி வெங்கடேஷ்வர ராவ். இதே பகுதியில் வசித்து வருபவர்கள்தான் பாபு ராவ் மற்றும் தாடேபள்ளி நரேஷ்.

இவர்கள் இருவரும் இளைஞர்கள். இவர்களுடன் சேர்ந்துதான் வெங்கடேஷ்வர ராவின் மனைவி கட்டிட வேலைக்கு செல்கிறார். தனது வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள்தானே எனவே அவர்கள் தன்னுடைய மனைவிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று வெங்கடேஷ்வராவும் நினைத்திருக்கிறார்.

ஆனால் இந்த சம்பவம் நடந்த பின்னர் அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதாவது, சம்பவம் கடந்த 9ம் தேதி நடந்திருக்கிறது. சம்பவம் நடந்த நாளுக்கு முன்னர் பாபு ராவ் மற்றும் தாடேபள்ளி நரேஷ் ஆகியோர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயல்வதாக வெங்கடேஷ்வராவின் மனைவி வெங்கடேஷ்வரவிடம் புகார் கூறியுள்ளார். ஆனால் இதனை வெங்கடேஷ்வராவ் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து அன்று மாலை அவரது மனைவி சோர்வாக வீடு திரும்பியுள்ளார். அப்போதும் வெங்கடேஷ்வராவ் எதையும் கண்டுகொள்ளவில்லை. அன்று மாலைதான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மாலை சரியாக 6.30 மணியளவில் பாபு ராவ் மற்றும் தாடேபள்ளி நரேஷ் இவர்களது வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

என்ன விஷயம் என்று கேட்டும்போது சும்மதான் வந்தோம் விஷயம் ஏதும் இல்லையென்று அவர்களது கைக்குழந்தையை எடுத்து கொஞ்சியுள்ளனர். பின்னர் இருவரில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த மயக்க மருந்தை எடுத்து வெங்கடேஷ்வர ராவ் மீது வீசியுள்ளார். இதில் அவர் நிலை குலைந்தபோது அவரது மனைவியை இருவரும் தூக்கிக்கொண்டு அருகில் இருந்த காட்டுப்பகுதியை நோக்கி ஓடியுள்ளனர். இவர்களது வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்ததால் கூச்சல் குரல் வேறு யாருக்கும் கேட்கவில்லை. எனவே இது இந்த இளைஞர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

பின்னர் காட்டில் வைத்து வெங்கடேஷ்வர ராவின் மனைவியை இரண்டு இளைஞர்களும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனால் இதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் அப்பெண்மணிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து இருவரும் தப்பி சென்றுள்ளனர். சம்பவத்தையடுத்து காட்டிலிருந்து கிழிந்த ஆடைகளுடன் வீட்டிற்கு வந்து பார்க்கையில் குழந்தை ஒரு பக்கம் கதறி அழுதுகொண்டிருந்திருக்கிறது. அதேபோல கணவர் வெங்கடேஷ்வர ராவ் மயக்க நிலையில் இருந்திருக்கிறார். உடனடியாக தண்ணீர் தெளித்து அவரை எழுப்பிய மனைவி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க போகலாம் என்றால் அதற்கு வெங்கடேஷ்வர ராவின் மனைவி ஒப்புக்கொள்ளவில்லை. எனவே சில நாட்கள் அப்படியே கழிந்திருக்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்காதது இக்குற்றத்தில் ஈடுபட்ட இருவருக்கும் மேலும் தைரியம் கொடுத்திருக்கிறது எனவே மீண்டும் மீண்டும் வெங்கடேஷ்வர ராவையும் அவரது மனைவியையும் சீண்டியுள்ளனர். இதனையடுத்து வெங்கடேஷ்வர ராவ் தற்போது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் இளைஞர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். கணவன் முன்னேரே அவரது மனைவியை இருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal