கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடித்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சேரன் நகர் மகாலட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி சந்திரன் தம்பதியினர்! இவர்கள் இந்த பகுதியில் இடம் வாங்கி புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார் .வீட்டு பணிகள் முடிந்த கடந்த வியாழக்கிழமை வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்துள்ளனர்.

பின்னர் குடும்பத்துடன் வீட்டில் குடியேறிய நிலையில் நேற்று காலை கிரகப்பிரவேசம் நல்ல முறையில் முடிவடைந்ததை ஒட்டி குடும்பத்துடன் சேலத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு வழிபட சென்றிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு இவர்களது வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 20பவுன் நகை தங்கநகை மற்றும் 2லட்சம் பணம் கொள்ளையடித்துள்ளனர்.

இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது 20 சவரன் நகை மற்றும் 2லட்சம் பணம் கொள்ளையடித்து தெரியவந்தது. பின்னர் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் அங்கு தடவியல் நிபுணர்களுடன் வந்த போலீசார் தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும், புதிய வீட்டில் போட்ட யாகசாலை கூட அகற்றாத நிலையில் அதற்குள் பீரோவை உடைத்து நகைகளை அள்ளி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்கள் முதல் தற்போது போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal