குருபெயர்ச்சி அடுத்த மாதம் நடக்க இருப்பதால், யார் குடிசையில் இருந்து கோபுரத்திற்கு செல்வார்கள்! கோபுரத்தில் இருந்து யார் குடிசைக்கு செல்பார்கள்..?

குரு பகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். ஏப்ரல் மாதம் வரை மீன ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் மே மாதம் முதல் மேஷ ராசியில் பயணம் செய்யப்போகிறார். மேஷ ராசியில் ராகு பயணம் செய்ய கூடவே குரு பகவானும் இணைவது குரு சண்டாள யோகத்தை தரப்போகிறது. குரு ராகு கூட்டணி எந்த ராசியில் இணைந்திருந்தால் என்ன மாதிரியான பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

குரு பகவான் மேஷ ராசியில் இருந்து சிம்மம், துலாம், தனுசு ராசிகளை பார்வையிடுவார். குரு பகவானின் பார்வையாலும் பயணத்தாலும் அதிகம் யோகம் பெறப்போவது மிதுனம்,சிம்மம், துலாம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களை அனுபவிக்கப்போகின்றனர்.

தேவர்களின் அரசனாக விளங்கிய காரணத்தால் தேவகுரு என்றும், நுண்ணறிவு மிகப்படைத்து கல்வி, கேள்விகளில் சிறந்தவர் என்பதால் பிரகஸ்பதி என்றும் அழைக்கப்படுகிறார் குரு பகவான். ராகு – கேது இருவரும் சுப கிரகங்களை சேரும்போது எதிர்பாராத யோகங்கள் அமைந்து விடும்.

ஜோதிட விதிப்படி சுப கிரகங்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டு. ஆனால், ராகு, கேதுவிற்கு கேந்திர, திரிகோணங்களில் அதிக யோக பலம் உண்டு. ராகுவை யோககாரகன், போககாரகன் என சாஸ்திரம் சிறப்பித்துக் கூறுகிறது. இப்படிப்பட்ட ராகு பவித்திரமான குருவுடன் சேரும்போது பல அதிர்ஷ்ட அம்சங்கள் கூடி வந்து விடுகிறது. ஒரு கோணத்தில் குருவும் போககாரகன்தான். குரு சண்டாள யோகம் ஒருவருக்கு பரிபூரணமாக பலன் தரும்போது நடக்குமா, நடக்காதா, கிடைக்குமா, கிடைக்காதா என ஏங்கித் தவித்த விஷயங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடந்து விடும். உயர் பதவிகள், பெரிய மனிதர்களின் நட்பு, அதிகார பீடத்தில் உள்ளவர்களின் தொடர்பு, ஒரு காலத்தில் சாதாரண நிலை, இன்று நினைத்து பார்க்க முடியாத மிரள வைக்கும் அசுர வளர்ச்சி, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் ஜாலம், உத்தம தர்ம சீலர்களை போல காட்டிக் கொள்ளும் பாவம். இதற்கெல்லாம் காரணம் தனலட்சுமி தேவியின் அருள்பார்வைதான்.

இவர்களுக்கு பொன்னும், பொருளும், முத்து சிவிகையும் கிடைக்கும் என்கிறது புலிப்பாணி பாடல். இந்த காலத்தில் மிக விலை உயர்ந்த நான்கு சக்கர வாகனம் கிடைக்கும். ராகுவின் மூலம் சேரும் செல்வம், யோகம், சொத்து எல்லாம் நிழலான மறைவான, சட்டத்திற்கு, தர்மத்திற்கு புறம்பான வகையில் தான் கிடைக்கும்.

குரு சுபகிரகமாக இருப்பதால் அவருக்கு பார்வை பலம் சுபமாக உள்ளது. குருவின் பார்வை பல தோஷங்களை போக்கும் என்பது சாஸ்திர விதி. குரு பார்வைதான் சிறப்பாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதுவும் குரு எந்த நிலையில் இருந்து பார்க்கிறார், எந்த வீட்டில் பார்வை படுகிறது குருவின் ஆதிபத்தியம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் உள்ளன. குரு எந்த வீட்டில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருப்பது நல்லது. தனித்த குருவினால் பாதிப்பு ஏற்படும்.

குரு பகவான் லக்னம், இரண்டு, ஐந்து, ஏழு, பத்து போன்ற வீடுகளில் இருக்கும்பொழுது சில விஷயங்கள் வாழ்க்கையில் பிரச்னைகளையும், தடுமாற்றங்களையும் ஏற்படுத்தும். குரு லக்னத்தில் இருப்பது பொதுவாக ஜாதகரை மிகப்பெரிய குழப்பமாகும்.

குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் படுவதால் பூர்வ புண்ணிய யோகம். 2ஆம் வீடான தனம், குடும்பம், வாக்கு, நேத்ரம் என்ற இந்த ஸ்தானத்தில் தனித்த குருவால் வாக்குவாதத்தில் ஈடுபட வைப்பார். பணத்தட்டுபாடு இருக்கும். 5ஆம் வீட்டில் குரு இருப்பது காரகோ பாவ நாஸ்தி. குழந்தை பாக்கிய பிரச்னைகள் இருக்கும். புத்திர தோஷம், புத்திர சோகம் ஏற்படும். 7ம் இடமான சப்தம கேந்திரம் களத்திர ஸ்தானமாகும். சுபகிரக ஆதிக்கம் உள்ள குருவிற்கு இங்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டு. இந்த இடத்தில் குரு தனித்து இருப்பதால் மணவாழ்க்கை போராட்டமாக அமையும். லக்னத்திற்கு பத்தாம் இடம் என்பது தசம கேந்திரம். வியாபார, தொழில், உத்யோக, ஜீவனஸ்தானத்தில் குரு தனித்து இருப்பதால் வியாபாரம், தொழிலில் நஷ்டம் ஏற்படும்.

குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தால் குருசண்டாள யோகம் ஏற்படும். ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.

துலாம் ராசியில் குருவும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் தீவிரவாத இயக்கங்கள் மீது ஆதரவு இருக்கும். விருச்சிகத்தில் குருவும் ராகுவும் இருந்தால் தன்னைத்தானே நெறிப்படுத்திக் கொண்டு முன்னேறுவார்கள். தனுசில் குருவும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் பல துறைகளில் வேலை பார்ப்பார்கள். மகர ராசியில் குருவும் ராகுவும் சேர்க்கை பெற்றால் மூத்த சகோதரர்களை விட சகோதரிகள் மிகுந்த அனுசரணையாக இருப்பார்கள். கும்ப ராசியில் குருவும் ராகுவும் இணைந்திருந்தால் சிலர் யோகா மாஸ்டர்களாக இருப்பார்கள். பழைய எதிரிகளை மறக்க மாட்டார்கள். வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு உரிய பரிகாரங்களைச் செய்து வழிபட்டால் நன்மைகள் ஏற்படும். மீனம் ராசியில் குருவும் ராகுவும் சேர்ந்திருந்தால் அக்கு வேறு ஆணி வேறாக எதையும் அலசுவார்கள். அடிப்படையான வாழ்க்கை விஷயங்கள் அனைத்தும் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்துவிடும்.

குரு சண்டாள தோஷம் நீங்க வேண்டும் என்றால், குரு மற்றும் ராகு சாந்தி பாராயணம் செய்ய வேண்டும். இது தவிர, பெற்றோருக்கு சேவை செய்ய வேண்டும். வீட்டில் அல்லது கோவிலில் விஷ்ணுவை வழிபடுவது குரு சண்டாள தோஷத்தின் எதிர்மறை விளைவுகளை குறைக்கிறது. திங்கட்கிழமை இரண்டு முகம் ருத்ராட்சம் அணிவதும் நன்மை தரும். மேலும் விநாயகப் பெருமானை தொடர்ந்து வழிபடுவதால் குரு சண்டாள தோஷம் நீங்கும். குரு மந்திரம் ‘ஓம் ப்ரம் பிரிம் ப்ரௌன் சஹ குர்வே நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும். வீட்டில் வாழை கன்றை நட்டு தினமும் வழிபடுவது சண்டள யோகத்தில் இருந்து நிவாரணம் பெற மிகவும் சிறந்த வழியாகும். இது தவிர ராகு மந்திரங்களை தொடர்ந்து உச்சரிக்கவும்.

எல்லாம் நன்மைக்கே…!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal