நிழல் கிரகம் என்று கூறப்படும் ராகு மீன ராசியில் பயணம் செய்கிறார். 2024 முதல் 2025ஆம் ஆண்டு வரைக்கும் நீர் ராசியான மீன ராசியில் பயணம் செய்யும் ராகுவினால் 18 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் திடீர் ராஜயோகம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மீனம்:

ராகு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம் செய்வதால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் கஷ்டங்கள் விலகி நற்பலன்களை அனுபவிக்க போகிறீர்கள். இனி எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிட்டும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். பண வருமானம் அதிகரிக்கும் . குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் பேச்சில் ஒரு நிதானமும் பொறுப்பு தன்மையும் தென்படும். நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியால் பொருளாதார நிலை உயரும் இதுநாள் வரை தடைப்பட்டிருந்த திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal