கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட சீன வீரர்கள் இந்தியாவில் ஊடுருவ முயன்ற போது இந்திய வீரர்கள் சீன வீரர்களை அடுத்து விரட்டியதாக தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாது சீன கப்பல் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்து சென்று இருக்கிறது. அதற்கெல்லாம் பதிலடியாக இந்த அக்னி5 ஏவுகணை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா தொடர்ந்து இந்தியாவுக்கு பிரச்சனை கொடுத்து வரும் நிலையில் 5000 கிலோமீட்டர் அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கக்கூடிய அக்னி-5 ஏவுகணை நேற்றிரவு சோதனை நடத்தப்பட்டது. சீனா அவ்வப்போது அத்துமீறி இந்திய எல்லையில் ஊடுருவி வரும் நிலையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் 5000 கிலோமீட்டர் தூரம் பாயும் அக்னி5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை மூலம் சீனாவில் உள்ள எந்த பகுதிக்கும் அணு ஆயுத தாக்குதல் நடத்த முடியும் என்றும் அது மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் வரை தாக்குதல் நடத்தக்கூடிய அளவுக்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இது உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று இரவு அப்துல் கலாம் ஏவுகணை மையத்தில் 5000 கிலோமீட்டர் தொலைவில் தாக்கும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 1500 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு செல்லக்கூடியது என்றும் இந்தியாவின் சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்று என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.