மக்களவையில் அஞ்சல் துறையில் நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களுக்கான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குத் தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசின் சௌஹான் பதிலளித்துள்ளார்.

அதில் அஞ்சல் துறையில் மொத்தமாக 75,384 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட தகவலின் படி அஞ்சல் துறையில் அஞ்சல் அலுவலகப் பணிகள் உள்பட குரூப் – ஏ, குரூப் – பி மற்றும் குரூப் – சி பணிகளுடன் சேர்த்து 75,384 காலிப்பணியிடங்கள் உள்ளதாக பதிலில் இடம்பெற்றுள்ளது.

காலிப்பணியிடங்கள்:
பிரிவு எண்ணிக்கை
குரூப் – ஏ 236
குரூப் – பி 7,743
குரூப் -சி 67,405
மொத்தம் 75,384

மேலும் இப்பணியிடங்களை அரசு எப்போது நிரப்பும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இவ்விடங்கள், ஓய்வு, பதவி உயர்வு, ராஜினாமா, இறப்பு போன்ற பல காரணங்களால் காலியாக உள்ளது என்றும் இப்பணியிடங்களை நேரடி ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு போன்றவற்றால் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது என்று இணை அமைச்சர் தேவுசின் சௌஹான் பதிலில் தெரிவித்துள்ளார்.

பணியிடங்களை நிரப்புவதற்கான வழிமுறைகள் மற்றும் அட்டவணைப் படி பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வரும் நாட்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal