கொரோனா வைரஸ் பரவலுக்கு இன்னும் சர்வதேச சுகாதார அவசரநிலை தேவைப்படுகிறதா என்பதை தீர்மானிக்க உலக சுகாதார அமைப்பு சார்பில் சில மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் பேசுகையில், “2023 ஆம் ஆண்டில் நாம் சந்திக்க வேண்டிய சவால்கள் நிறைய இருப்பதாகவும், எதிர்காலத்தில் கொரோனா போன்ற நோய்த் தொற்று பரவல்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய பாடம்” என தெரிவித்து உள்ளார். “2023 ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசரநிலையாக கருத வேண்டிய அவசியம் இருக்காது,” என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்து உள்ளார்.
அண்டை நாடான, சீனாவின் வூகான் மாகாணத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த்த தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், கனடா உட்பட உலக முழுவதும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து சர்வதேச நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 66 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் பேசுகையில், “2023 ஆம் ஆண்டில் நாம் சந்திக்க வேண்டிய சவால்கள் நிறைய இருப்பதாகவும், எதிர்காலத்தில் கொரோனா போன்ற நோய்த் தொற்று பரவல்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய பாடம்” என தெரிவித்து உள்ளார். கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ள நிலையில், வரும் 2023 ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசரநிலையாக கருத வேண்டிய அவசியம் இருக்காது என அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். மேலும், கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்த தகவல்களை பகிரும்படி, சீனாவுக்கு, டெட்ரோஸ் அதனோம் வலியுறுத்தி உள்ளார்.
இதற்கு என்ன விளக்கம் சீனா தெரிவிக்க போகிறது என்று உலக நாடுகள் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.