ஒரே இரவில் இரண்டு முறை உல்லாசத்துக்கு வர மறுத்ததால் மனைவியை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரொஹா மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது அன்வர் (34). இவரது மனைவி ருக்‌ஷர் (30). கடந்த 2013-ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் குடியிருக்கும் வீட்டின் கீழ் தளத்தில் சொந்தமாக முகமது அன்வர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில், அன்வர் தனது மனைவியுடன் இரவு உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், அசதியின் காரணமாக ஆழ்ந்து தூங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து மீண்டும் உடலுறவுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதற்கு மனைவி ருக்‌ஷர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், தலைக்கெறிய காமவெறியில் மனைவியை கழுத்தை நெறித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். பின்னர், கொலை செய்த மனைவியின் உடலை யாருக்கும் தெரியாமல் உடலை பிளாஸ்டிக் கவரில் கட்டி சாலையோரத்தில் வீசி சென்றுள்ளார். இதனையடுத்து, எதுவும் தெரியாதது போல மனைவியை காணவில்லை என்று முகமது அன்வர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, ரதுபுரா கிராமத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் உயிரிழந்தது ருக்‌ஷர் என்பது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக கணவரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் மனைவி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் விசாரணையில் ஒரே இரவில் இரு முறை உல்லாசத்துக்கு வர மறுத்ததால் மனைவி ருக்‌ஷரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து, கொலைக்கு உடந்தையாக இருந்துது அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal