திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தீப மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இக்கோயிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமாலுக்கும், பிரம்மாவிற்கும் இடையே ஏற்பட்ட ‘தான்’ என்ற அகந்தையை போக்க சிவபெருமான், திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். இந்த நாளே கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவானது 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது ஏற்றப்பட்ட மகா தீபம் மாண்டஸ் புயலிலும் தொடர்ந்து அணையாமல் சுடர் விட்டு எரிவதை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.
சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி அளித்த தீபத்திருநாளான 10-ம் நாள் விழாவின்போது அதிகாலை கோயில் வளாகத்தில் ‘பஞ்ச பூதங்களாக திகழ்வதும் இறைவனே’ என்பதை விளக்கும் வகையிலும், உலகத்தின் இயக்கத்தை நடத்துவதும், உயிர்களை காப்பதும் ‘ஜோதி’தான் என்பதை விளக்கும் வகையிலும் கருவறைக்கு எதிரே உள்ள அர்த்த மண்டபத்தில் சூரிய பகவான் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் பரணி தீபம் அனைத்து சன்னதிகளுக்கும் எடுத்து செல்லப்படும். தொடர்ந்து மாலையில் மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த மகாதீப கொப்பரை 5 அரை அடி உயரமும், மேல் விட்டம் 3 அரை அடியாகவும், கீழ்பகுதி விட்டம் 2 அரை அடியாகும் 250 கிலோ எடையும் கொண்டது தீப கொப்பரை. இந்த தீப கொப்பரை முழுவதும் செப்பு தகடுகளால் செய்யப்பட்டவை, தீப கொப்பரை ஆனது பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று அடுக்குகளால் ஆனது தான் தீப கொப்பரை சிவனும் சக்தியும் ஒன்று என்ற தத்துவதை விளக்கும் வகையில் தான் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்திற்கு 4500 கிலோ நெய்யும், 1150 மீட்டர் காடத்திரியும் பயன்படுத்தப்படுகிறது.