நாட்டில் போதைக் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், மாணவர்களின் பேக்குகளில் ஆணுறைகளும், மாணவிகளின் பேக்குகளில் கருத்தடை மாத்திரைகளும் இருந்ததுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூர் மாநகர பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்து பயன்படுத்துவதாகத் தொடர்ச்சியான புகார்கள் மாநகர கல்வித்துறை அதிகாரிகளுக்கு வந்த வண்ணம் இருந்த காரணத்தால் இன்று காலை முதல் பெங்களூர் மாநகர எல்லைக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் கொண்டுவருகிறார்களா என்பதைக் கண்டறியப் பறக்கும் படை சோதனை நடத்தப்பட்டது.

குறிப்பாக எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவர்களின் பைகளில் நடத்தப்பட்ட சோதனையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களிடம் சிகரெட், ஆணுறை பொருட்கள் அதிக அளவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெண்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் மாணவிகள் சிலர் கருத்தடை மாத்திரைகளைப் பைகளில் வைத்திருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் அதிர்ச்சி அடைந்த கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து ஒருங்கிணைந்த கவுன்சிலிங் வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்துக்களாக இருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal