பாலிவுட் நடிகை ஐம்பது வயதில் காதல் வசப்பட்டிருப்பதும், ஏற்கனவே திருமணமான இவர், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் காட்டுத் தீயாக தகவல் பரவ, பாலிவுட்டே பரபரப்பாகியிருக்கிறது.

பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர் ஆவார். இதையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்து வரும் அவர், அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பேமஸ் ஆனார்.

50 வயதை நெருங்கிவிட்ட இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்கிற மகனும் உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அர்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்தார் மலைக்கா அரோரா.

அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பின்னர் துணிவு பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்ட மலைக்கா அரோரா, தற்போது அவருடன் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார். அர்ஜுன் கபூரை விட மலைகா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வயதை பொருட்படுத்தாமல் காதலித்து வரும் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை மலைக்கா அரோரா கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவியது. அர்ஜுன் கபூரை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமா என்று பலரும் கேள்வி எழுப்பி ட்ரோல் செய்து வந்தனர். இதையடுத்து கடுப்பான மலைக்கா அரோரா, தான் கர்ப்பமாக இருப்பதாக பரவிய செய்தி உண்மையில்லை என கூறியதோடு, இதுபோன்ற செய்திகளை பரப்பியவர்களை கடுமையாக சாடி இருந்தார். அர்ஜுன் கபூரும் இதுகுறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal