தி.மு.க.வின் இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்த நாளை, இந்தாண்டு உடன் பிறப்புக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், அரசு பள்ளி மாணவர்களை பிறந்த நாள் நிகழ்ச்சியில் பயன்படுத்தியதுதான் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இது பற்றி முகம் சுழித்த மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், உதயநிதி பிறந்த நாள் நிகழ்ச்சியை உடன் பிறப்புக்கள் உற்சாகமாக கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அரசு பள்ளி மாணவர்களை வைத்து உதயநிதியை வாழ்த்தி பாடியதுதான் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு முன்பு முதல்வராக இருந்தவர்களைக் கூட அரசு பள்ளி மாணவர்களை வைத்து வாழ்த்திப் பாடியதில்லை. ஆனால், உதயநிதிக்கு அரசு பள்ளி மாணவர்கள் வாழ்த்திப் பாடியிருக்கின்றனர். இது வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது! அதேபோல், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு பள்ளி மாணவர்களை வைத்து, உதயநிதிக்கு வாழத்துப் போஸ்டர் ஒட்டிய விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அரசு பள்ளிகள் ரசிகர் மன்றங்களாக மாறுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

எனவே, பிறந்தநாளைக் கொண்டாடுவதில் தவறில்லை. அதில் அதிகார துஷ்பிரயோகம் இருக்கக்கூடாது’’ என்றனர்!

திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்த கலைஞர் கருணாநிதிக்குக் கூட இப்படி பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார்களா…?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal