தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியில் முதன்மையானது, மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கு திட்டம். ஆனால், திட்டம் இன்றுவரை செயல்படுத்தவில்லை.
குடும்பத் தலைவிக்கு எப்போது ஆயிரம் ரூபாய் கொடுப்பீர்கள் என்று உதயநிதி ஸ்டாலினிடம் நேரடியாகவே பெண்கள் கேட்டுவிட்டனர். ‘இன்னும் ஐந்து வருடம் இருக்கிறது… அதற்குள் கொடுப்போம்’ என்றார்.
வருகிற 2024&ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில்தான் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த திட்டத்தை உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கலாமா என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தியுள்ளது.
தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த, ஆலோசனை வழங்க பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவுக்கு உதவ துணைக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிடுள்ளது. மேலும், நிதித்துறையின் கூடுதல் செயலாளர் பிரசாந்த் வடநரே உட்பட 4 பேர் அடங்கிய துணைக்குழுவை அமைத்தும் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக நிதியமைச்சர், இந்த குழுவுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்!
எனவே, மார்ச் மாதம் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க வாய்ப்பி இருக்கிறது என்கிறார்கள்!