68 வயது முதியவரை செக்ஸ் வலையில் வீழ்த்தி இளம்பெண் பணம் பறித்த சம்பவம்தான் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் திருச்சூர், குன்னம்குளம் பகுதியை சேர்ந்தவர் நிஷாத். நிஷாத்தின் மனைவி ரஷிதா (வயது 28). இருவரும் சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதன்மூலம் இருவருக்கும் பலரது தொடர்பு கிடைத்தது. இதில் பணம் படைத்த முதியவர்கள் யார்-யார் என கண்டறிந்து அவர்களுடன் ரஷிதா தொடர்பு கொண்டார். இதில் மலப்புரம் பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருடன் ரஷிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் ரஷிதா நெருங்கி பழகியதோடு, அந்த முதியவரை தன் வீட்டிற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் எனவும் ஆசைவார்த்தை கூறினார்.

ரஷிதாவின் ஆசைவார்த்தையில் மயங்கிய முதியவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷிதா வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தனர். இதனை ரஷிதாவின் கணவர் நிஷாத் செல்போனில் படம் எடுத்தார். அதன்பின்பு கணவன்-மனைவி இருவரும் முதியவரை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் ரஷிதாவுடன் உல்லாசமாக இருக்கும் படம் இருப்பதாகவும், அதனை சமூகவலைதளத்தில் பதிவிடாமல் இருக்க பணம் தரவேண்டும் எனவும் மிரட்டினர்.

இதனை கேட்டு மிரண்டு போன முதியவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரஷிதா மற்றும் அவரது கணவர் நிஷாத் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பினார். இப்படி ரூ.27 லட்சம் வரை இருவரும் பணம் பறித்தனர். அதன்பின்பும் அவர்களின் மிரட்டல் தொடர்ந்தது. இதனால் முதியவர் மிகவும் மன உளச்சலுக்கு ஆளானார். இதற்கிடையே முதியவரின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் கைமாறிய தகவலை அவரது உறவினர்கள் அறிந்தனர். அவர்கள் இதுபற்றி முதியவரிடம் கேட்டபோது அவர் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கூறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மலப்புரம் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தலைமறைவாக இருந்த நிஷாத்-ரஷிதா இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இதுபோல வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal