தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களாக அஜித், விஜய், விக்ரம் என அனைவரிடம் ஜோடி போட்டு ஆடியவர்தான் நடிகை திரிஷா… தமிழ் சினிமா மட்டுமின்றி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர்.
சமீபத்தில் ‘நம்பர் 1’ நடிகையே திருமணம் செய்துவிட்டார். பல வருடங்களாக த்ரிஷாவிற்கு எப்போது கல்யாணம் என திரையுலகினரும், அவரது ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கும் தருவாயில்,அவ்வப்போது கிசுகிசுக்களிலும் சிக்கி கொள்வார். ஏற்கனவே தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆகி திருமணம் நின்ற நிலையில் பல நடிகர்களோடு தொடர்பில் இருந்ததால் கிசுகிசுக்கப்பட்டார்.
இருந்தாலும் அனைத்தையும் கடந்து, சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, அந்த கதாபாத்திரத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதனிடையே பல திரைப்படங்களில் நடிகை த்ரிஷாவிற்கு நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.
இது எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் த்ரிஷாவின் வயது 35ஐ கடந்த நிலையில், அவரது வீட்டில் கல்யாணம் பண்ணிக்கோ என அனைவரும் கூறி வருவதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வருடம் ஜூன் மாதம் நடிகை நயன்தாராவிற்கு திருமணமான உடனே நடிகை த்ரிஷாவிற்கு எப்போது திருமணம் என பலரும் அவரை பார்க்குமிடமெல்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.
அதற்கெல்லாம் மழுப்பி பதில் கூறிய த்ரிஷா, தற்போது அவர் ஏன் திருமணம் செய்யாமல் உள்ளார் என்ற உண்மையான விவரம் வெளியாகியுள்ளது. திரிஷா பொதுவாகவே பொழுதுபோக்கில் அதிகமான ஆர்வம் உள்ளவர். இரவு ஆனால் போதும் பார், பப் என அனைத்து இடங்களுக்கும் சென்று, கையில் மது பாட்டிலுடன் சுற்றும் பழக்கம் திரிஷாவிற்கு பல ஆண்டுகளாக உள்ளது.
இதனிடையே திருமணம் செய்து கொண்டால் இந்த ஒரு விஷயம் செய்ய முடியாது என்பதால் திரிஷா திருமணத்திலிருந்து எப்போதுமே ஒதுங்கியே வருகிறாராம். தற்போது திரிஷாவிடம் பெயர், புகழ்,பணம் நிம்மதி, சந்தோஷம் என அனைத்தும் உள்ள போதிலும் திருமணம் செய்துக்கொண்டால் தனது சுதந்திரத்தில் யாரேனும் தலையிட நேரிடுமோ என்ற பயத்தில் திருமணமே வேண்டாம் என அந்தர் பல்டி அடித்து வருகிறாராராம் திரிஷா.