‘என்னோட பொண்ண ஏமாத்தி… கர்ப்பமாக்கி… அவளோட வாழ்க்கையை சீரழித்துவிட்டான்’ என்று தாய் காவல்நிலையத்தில் கதறிய சம்பவம்தான் கல்நெஞ்சையும் கரையை வைத்தது!

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்‌னேஷ். 19 வயது வாலிபரான இவருக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவி, தினமும் பள்ளிக்கு பஸ்சில் சென்று வந்தார். வாலிபர் விக்னேசும் பஸ்சிலேயே வேலைக்கு சென்று வந்தார். அப்போது தான் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

விக்னேஷ், மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை, விக்னேஷ் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் தனிமையில் இருந்த போது விக்னேஷ், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதில் பிளஸ்-1 மாணவி கர்ப்பம் ஆனார்.

இதுபற்றி தெரிய வந்ததும் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக புளியந்தோப்பு மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து வாலிபர் விக்னேஷ் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தப்பி ஓடிய அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கர்ப்பமான மாணவி எழும்பூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal