தென்னிந்தியாவைப் பொறுத்தளவில் கேரளத்து வரவு நடிகைகளே நம்பர் ஒன் இடத்தை பிடித்து வருகிறார்கள். அதிலும் ஒருவர் இன்னும் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் கேரளத்து வரவான ‘ஐஸ்வர்யமான’ நடிகை ஒருவருடைய அட்ஜஸ்ட்மென்ட்டை பார்த்து தயாரிப்பாளர்களே மூக்கின் மேல் விரல் வைத்து வருகிறார்களாம்… ஆமாம்… அந்தளவிற்கு அம்மனி ‘ஈகோ’ பார்க்காமல் நடித்து வருகிறாராம்.

இந்த அட்ஜஸ்ட்மென்டாலேயே, தென்னிந்திய சினாமாவில் அடுத்தடுத்த படங்களில் ‘கமிட்’ ஆகியிருக்கிறாராம். இந்தாண்டு மட்டும் ஆறேழு படங்களில் ரிலீஸ் ஆகியிருக்கிறதாம். சக நடிகைகள் அனைவரும் இவருக்கு எப்படி திடீரென இப்படி வாய்ப்பு மழை குவிந்து வருகிறது என்கிற பொறாமையோடு உற்று நோக்கி வருகிறார்களாம்.

ஐஸ்வர்யமான நடிகைக்கு இப்படியொஐ வாய்ப்பு குவிந்துவருவதை ஒட்டுமொத்த திரைத்துறையையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பார்க்கவும் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் அசத்தி எடுப்பதால் நடிகைக்கு பட வாய்ப்புகள் குவிந்தாலும், மற்ற நடிகைகளுக்கு அமையாத வாய்ப்பு இவருக்கு மட்டும் எப்படி சாத்தியம் ஆனது என்பது தான் எல்லோருடைய கேள்வியும்!

பிரபல இசையமைப்பாளரின் சொந்தக்காரியான அந்த நடிகை அவர் மூலமாகத் தான் படித்த படிப்பை விட்டு விட்டு சினிமாவில் நடிக்க வந்து விட்டார் என்றும் பேசிக் கொள்கின்றனர். ஒரு மொழியில் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் இந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவது பல முன்னணி நடிகைகளையே பொறாமையில் ஆழ்த்தி உள்ளதாம்.

சின்ன படங்கள், பெரிய படங்கள் என்கிற பாகுபாடு எல்லாம் பார்க்காமல் மாறி மாறி நடித்து வருகிறார் அந்த இளம் நடிகை. திடீரென நடிகைக்கு இப்படி முக்கியமான படங்கள் குவிந்து வருவதற்கு பின்னணி உள்ள காரணம் இதுதான்!

அந்த இளம் நடிகையை பல இயக்குநர்களும் அணுக காரணம் அவர் சம்பள விஷயத்தில் செய்து கொள்ளும் அந்த அட்ஜெஸ்ட்மென்ட் தான் என்கின்றனர். கோடிகளில் எல்லாம் சம்பளம் வாங்காமல் பெரிய படங்களில் நடித்ததன் பின்னரும் அதிக சம்பளத்துக்கு ஆசைப்படாமல் சில லட்சங்களிலேயே சம்பளம் வாங்கி வருவதால் தான் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அந்த நடிகையை உடனடியாக புக் செய்து தங்கள் படங்களில் நடிக்க வைத்து வருகின்றனர் என்கின்றனர்.

மேலும், அந்த நடிகை நடித்த படங்கள் எல்லாமே மினிமம் கியாரண்டி வெற்றி முதல் பெரிய வெற்றி வரை அடைந்து வரும் நிலையில், அவரது முகராசி ஒன்றே போதும் படம் வெற்றிக்கு என்றும் நினைக்கும் தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் பரிந்துரை செய்த உடனே ஓகே செய்து அம்மணிக்கு முதல் அட்வான்ஸை கொடுத்து வருகிறார்களாம்.

சூட்டிங்கில் நேரம் அதிகம் ஆனாலும், கொஞ்சம் கூட முகம் சுளிக்காமலும், டபுள் பேட்டா எல்லாம் கேட்காமலும் அந்த நடிகை நடந்து கொள்வது தான் அவருடைய சக்சஸுக்கான சீக்ரெட் என்றும் ஒரு படத்தில் நடித்த உடனே சில நடிகைகள் பெரிய ஆட்டம் போட்டு வருவது தான் அவர்களுக்கு அடுத்தடுத்த படங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal