‘பாகுபலி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தமன்னா, விரைவில் இளம் தொழிலதிபர் ஒருவரை கைப்பிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
நடிகை தமன்னா, மும்பையை சேர்ந்தவர் என்றாலும்… இவருக்கு பட வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்து முன்னணி நடிகையாக உயர்த்தியது தென்னிந்திய சினிமா தான். தமிழ் – தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், எப்போது திருமணம் செய்து கொள்வார் என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமன்னா 30 வயதை கடந்த நடிகைகள் லிஸ்டில் இணைந்து விட்டதால் அவ்வப்போது அவரிடம் திருமணம் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த கேள்விக்கு இன்னும் திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை என்றும், அதற்கான காலம் வரும் போது, பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வேன் என கூறி வந்தார்.
இந்நிலையில் தற்போது தமன்னா மும்பையை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள, ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த தகவலை தமன்னா வெளிப்படையாக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமன்னா திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதால் அவரது பெற்றோர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய தயாராகி வருகிறார்களாம். மேலும் தமன்னாவும், திருமணத்திற்கு முன்னதாக சில நாட்கள் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதால், சில படவாய்ப்புகளை தவிர்த்து வருவதாகவும் கிசுகிசுக்க படுகிறது.