தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 16-ந் தேதி (நாளை) உருவாகிறது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
- வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
- தமிழக கடலோர பகுதிகளில் வரும் 19ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
- நவம்பர் 19ம் தேதி முதல் மழை படிப்படியாக தீவிரமடைய வாய்ப்பு உள்ளது’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
