நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கம் இன்று காலை முடக்கப்பட்ட சம்பவம்தான் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் திரையுலகில் சக்சஸ்ஃபுல் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இவ்வாறு தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த நடிகர் கார்த்தி, தற்போது ஜப்பான் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து அவரது ரசிகர்கள் ஷாக் ஆகிப்போகினர். இன்று காலை கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தில் வீடியோ கேம் விளையாடுவதை வீடியோ எடுத்து நேரலை செய்யப்பட்டு வந்தது. இதை பார்த்த ரசிகர்கள் என்ன நடக்கிறது என தெரியாமல் குழம்பிப்போய் இருந்தனர்

பின்னர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள கார்த்தி, தனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளதை அதில் உறுதி செய்துள்ளார். அதனை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருந்தார். நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தை 39 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal