தமிழ் சினிமாவில் தனது அழகிய சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

திருமணத்திற்குப் பிறகு இவர் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் “பட்டாஸ்” திரைப்படம் வெளியானது. நடிகை சினேகாவின் திருமண வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. அவர் பிரசன்னாவை விவாகரத்து செய்ய உள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வரும் என்றும் செய்திகள் உலா வந்தன.

இந்நிலையில் கணவர் பிரசன்னா உடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, விவாகரத்து என்ற செய்தி வதந்தி என நிரூபிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதன்மூலம், விவாகரத்து இல்லை என்பது தெளிவாகிறது. இன்றைய காலத்தில் பலரும் சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்தி, பல தவறான கருத்துகளையும், தகவல்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இதனால்மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பாமல் இருப்பது நல்லது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal