பள்ளி மாணவன் ஒருவனுக்கு ‘மது’ வாங்கிக் கொண்டு பலாத்காரம் செய்த சம்பவம்தான் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அம்பிகா 34 (பெயர் மாற்றப்பட்டுள்ள). கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஓராண்டிற்கு முன்பு கொரோனா காலத்தில், போதிய வருமானம் இல்லாமல் இருந்த வந்துள்ளார். அதனால், பொருளாதார சமாளிப்பதற்காக அந்த பகுதி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்திருக்கிறார். கொரோனாவுக்காக பள்ளிகள் மூடப்பட்டநிலையில், பல பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் டியூஷனிலாவது படிக்கட்டும் என்று விருப்பப்பட்டு, இந்த டீச்சரிடமே தங்கள் பிள்ளைகளை கொண்டு வந்து சேர்த்தனர். அப்படித்தான் அந்த 16 வயது மாணவனும் வந்து சேர்ந்தான்.

எத்தனையோ மாணவர்கள் படிக்கும்போது, அந்த குறிப்பிட்ட மாணவன் மீது மட்டும் டீச்சருக்கு கவனம் குவிந்தது. மற்ற மாணவர்களுக்கு சொல்லி தருவதைவிட இந்த சிறுவனையே எந்நேரமும் டியூஷனில் பார்த்து கொண்டு இருப்பாராம்..பக்கத்திலேயே அந்த சிறுவனை உட்கார வைத்து கொள்வாராம். தேவையில்லாமல் அந்த சிறுவனை தொட்டு தொட்டு பேசி சபலப்பட்டுள்ளார். நாளுக்கு நாள் டீச்சரின் சபலம் அதிகமாகுவதை அறிந்து, அந்த சிறுவன் அதிர்ந்து போனான். மாணவனுக்கு சீண்டலில் விருப்பம் இல்லை என்பது தெரிந்தும், அவனை பலாத்காரம் செய்ய துணிந்தார். மதுவை ஊற்றி கொடுத்து சிறுவனை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 2 வருடமாக இந்த கொடூரம் நடந்துள்ளது.

நாள் ஆக ஆக, மாணவன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. முன்புபோல் யாருடனும் பேசாமல் ஒதுங்கியிருப்பதும், சோர்வாகவே இருப்பதும் தெரியவந்தது. மாணவனின் நடவடிக்கையில் உள்ள மாற்றத்தை, அவனது பெற்றோர் கண்டுபிடித்து, கவலைக்குள்ளானார்கள். உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் இதை பற்றி சொல்லி வருத்தப்படவும், அவர்களும், மாணவனை அழைத்து விசாரித்தனர். அவர்களுக்கும் எந்தவிதமான விஷயமும் பிடிபடவில்லை என்பதால், பள்ளி சார்பிலேயே மனநல ஆலோசகரிடம் மாணவனை அழைத்து சென்றிருக்கிறார்கள். நடந்ததை சொல்லி அழுதுள்ளான்.

முதல்முறையாக மாணவனுக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து இருக்கிறார். இதில் அந்த மாணவர் மயங்கி விழுந்து, அதற்கு பிறகு, மாணவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் டியூஷன் டீச்சர். போதை தெளிந்ததும், என்ன நடந்தது என்பதே மாணவனுக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனாலும் மாணவன் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் மதுவின் ருசி மாணவனுக்கு ஒட்டிக்கொண்டுவிட்டதாக சொல்கிறார்கள். அதனால்தான், ஒவ்வொருமுறை டீச்சர், மதுவை தந்தபோதும் தட்டாமல் வாங்கி குடித்துள்ளார்.

எப்போதுமே இந்த மாணவன் நன்றாக படிப்பானாம். ஆனால், கொரோன நேரத்தில் பள்ளிகள் மூடிவிடவும், தேர்வு மதிப்பெண்கள் வெளியே தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. பள்ளி திறந்து, தேர்வுகள் நடந்தபோதுதான், மாணவனின் மதிப்பெண்கள் குறைந்துள்ளது. ஆனால், சக நண்பர்களிடம் மாணவன் பேசாமல் ஒதுங்கி உள்ளான். ஒருவேளை மதிப்பெண் குறைந்ததால்தான், பேசாமல் ஒதுங்கியிருப்பதாக மற்ற மாணவர்கள் நினைத்துவிட்டார்களாம். அந்த டீச்சரிடம் போலீசார் விசாரித்தபோது, நடந்த சம்பவம் அத்தனையும் உண்மை என்று ஒப்புக் கொண்டாராம்.

இப்போது போக்சோவில் கைதாகி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் கணித ஆசிரியை..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal