சமீபத்தில்தான் தூத்துக்குடி அமைச்சர் அனிதா ராதாகிரஷ்ணனுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு அமைச்சர் கீதா ஜீவனும் சர்ச்சையில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வரின் பேத்தியும், செந்தாமரையின் மகள் தூத்துக்குடிக்கு ‘ஸ்போர்ட்ஸ் கேம்ப்’புக்கு சென்றிருக்கிறார். அங்கு, இவரோடு சில மாணவர்களும் ‘ஸ்போர்ட்ஸ் கேம்ப்’பில் கலந்து கொண்டனர்.

ஆனால், அமைச்சர் கீதா ஜீவன் செந்தாமரையின் மகளுக்கு அரசு காரில் காலை டிபன், மதிய உணவு, இரவு உணவு என மூன்று வேளையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதே போல், செந்தாமரையின் மகளை மட்டும் அடிக்கடி சென்று அமைச்சர் கீதா ஜீவன் நேரடியாக பார்த்து, தனிக் கவனம் செலுத்தியது மற்ற பெற்றோர்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

பள்ளி மாணவர்களிடையே வேற்றுமை இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் சீருடை அணிவிக்கப்படுகிறது. ஆனால், முதல்வரின் பேத்தி என்பதற்காக அமைச்சர் கீதா ஜீவன் அடிக்கடி ஸ்போர்ட் கேம்பிற்கு சென்றதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal