கோலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் அனு இம்மானுவேலும் ஒருவர். இவர் தற்போது காதல் வலையில் விழுந்திருப்பதாக ‘கிசு கிசு’ப்புகள் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்த இவர் இந்தியாவில் பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருந்த போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததை அடுத்து, சுவப்னா சஞ்சரி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

மலையாளத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அனு இம்மானுவேல் முதன் முதலாக ஹீரோயினாக நடித்திருந்தார். இதையடுத்து, தமிழில் 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அனு. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழ் மட்டுமல்லாது டோலிவுட்டில் அறிமுகமான அம்மணிக்கு தெலுங்கில் பட படவாய்ப்புகள் குவிந்ததை அடுத்து, அங்கேயே செட்டிலான அனு இமானுவேல் அவ்வப்போது கிசுகிசுவிலும் சிக்கி வருகிறார். ஆக்சிஜன் என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குநரை காதலிப்பதாக வதந்தி பரவியது. இதையடுத்து, அல்லு அர்ஜூனின் சகோதரர் அல்லு சிரிஷுனை காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங் செல்வதாகவும் சொல்லப்படுகிறது.

நீண்ட நாட்களாக இவர்களின் காதல் விவகாரம் கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், நடிகை இம்மானுவேல் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘‘ஊர்வசிவோ ராக்ஷசிவோ படத்தில் நடிப்பதற்கு முன்பு அல்லு ஷிரிஷை இரண்டு முறை நான் சந்தித்துள்ளேன். இப்படத்தின் கதாபாத்திரம் பற்றி இருவரும் காஃபி ஷாப்பில் சந்தித்து பேசினோம். இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியானதால் நாங்கள் காதலிப்பதாக வதந்தி பரவியது’’ என்றார்.

இந்தச் செய்தியை கேள்விப்பட்ட அல்லு சிரிஷின் தந்தை அல்லு அரவிந்தும் என் மகனுடன் டேட்டிங் போறியா என்ற கிண்டலாக கேட்டார். இருவர் குறித்து பரவிவரும் வதந்தி பற்றி நாங்களே பலமுறை பேசி சிரித்து இருக்கிறோம் என்றார். ‘ஊர்வசிவோ ராக்ஷசிவோ’ தெலுங்கு திரைப்படம் திரையரங்கில் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal