காமம் தலைக்கேறினால் தலை – கால் புரியாது… உறவுகள் தெரியாது… என்பார்கள். அப்படித்தான் காமத்தால் பெண் சடங்களுடன் ஒரு சைக்கோ உடலுறவு கொண்ட விவகாரம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இங்கிலாந்தில் 101 பெண் சடலங்களுடன் உடலுறவு கொண்டும், இரண்டு பெண்களை கொலை செய்து தனது காமப்பசிக்கு இரையாக்கிய 62 வயது மனித மிருகத்துக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றவாளியை பிணம் தின்னும் கழுகு எனக் குறிப்பிட்ட நீதிபதி, இனி இதுபோன்ற குற்றங்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இங்கிலாந்தில் உள்ள கேன்ட்டர்பர்ரி நகரில் உள்ள கென்ட் என்ற கவுன்ட்டியை (மாவட்டம்) சேர்ந்தவர் டேவிட் ஃபுல்லர் (68). இவர் தனது 20 வயது முதல் அங்குள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் எலக்டீரிஷியனாக பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்த சூழலில், கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி இரவு, தான் பணிபுரிந்து வந்த மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு டேவிட் ஃபுல்லர் சென்றிருக்கிறார். அப்போது பிணவறைக்கு வெளியே எதேச்சையாக நடந்து சென்ற நர்ஸ் ஒருவர், உள்ளே ஏதோ சத்தம் கேட்கவே ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார்.
அப்போது அவர் பார்த்த காட்சி அவரை அச்சத்தில் உறைய செய்துவிட்டது. ஏனெனில், அங்கு ஒரு இளம் வயது உடைய பெண்ணின் சடலத்துடன் டேவிட் உடலுறவு வைத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நர்ஸ், இதுகுறித்து மருத்துவர் ஒருவரிடம் கூற, டேவிட் ஃபுல்லர் கையும் களவுமாக பிடிபட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், டேவிட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் தான் சடலத்துடன் உடலுறவு கொண்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
ஆனாலும், போலீஸாருக்கு டேவிட் மீது சந்தேகம் தீரவில்லை. இன்னும் எதையோ அவர் மறைக்கிறார் என்பதை போலீஸார் தெரிந்துக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, 20 வயதில் தான் வேலைக்கு சேர்ந்தது முதலாகவே பல மருத்துவமனைகளில் பிணவறைகளுக்கு சென்று பெண் சடலங்களுடன் உறவு கொள்வதை வழக்கமாக வைத்திருந்ததாக டேவிட் கூறினார். மேலும், 1987-ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு இளம்பெண்களை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவர்களின் உடல்கள் பிணவறைக்கு வந்ததும் அவற்றுடனும் உறவு கொண்டதாக டேவிட் வாக்குமூலம் அளித்தார்.
டேவிட்டின் இந்த வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், அவரது செல்போனையும் பரிசோதித்தனர். இதில் 101 பெண் சடலங்களுடன் அவர் உடலுறவு கொண்டதை அவரே வீடியோவாக பதிவு செய்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். இவை அனைத்தும் 2008 முதல் 2020-ம் ஆண்டுக்கு இடைப்பட்டது தான். அதற்கு முன்பு எத்தனை சடலங்களுடன் டேவிட் உறவை வைத்துக் கொண்டார் எனத் தெரியவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த க்ரோடான் க்ரௌன் நீதிமன்ற நீதிபதி, டேவிடுக்கான தண்டனை விவரங்களை கடந்த வியாழக்கிழை அறிவித்தார். அறிவித்தது. அப்போது அவர், “பார்ப்பதற்கு ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக தோற்றம் அளிக்கும் டேவிட் ஃபுல்லருக்கு, மிக மோசமான இருண்ட பக்கம் இருப்பது நிரூபணமாகியுள்ளது. பிணம் தின்னும் கழுகை போல, பிணவறையில் பெண் சடலங்களை அவர் தேடி உடலுறவு கொண்டு வந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், தனது காம இச்சைக்காக இரண்டு அப்பாவி பெண்களையும் அவர் கொன்றிருக்கிறார். இவருக்கு மரண தண்டனை விதிப்பதால் சில நொடிகள்தான் அவர் வேதனையை அனுபவிப்பார். அது சரியாக இருக்காது. அவர் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் அவர் வேதனையை அனுபவிக்க வேண்டும். எனவே அவருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது” எனக் கூறினார்.