பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்திக்குப் பின்னால், காலம் காலமாக அரசியல் பின்னிப் பிணைந்து இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் தொழிலதிபர்… அரசியல்வாதி… சமூக சேவகர்… சொற்பொழிவாளர்… கல்விக்கு கைகொடுப்பவர்… என பன்முகங்களைக் கொண்டவரும், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தவருமான ச.அய்யாத்துரைப் பாண்டியன். ‘தேவர் அய்யாவை ஒரு சமுதாயத்திற்குள் அடைக்க வேண்டாம்… அனைத்து ஜாதியினரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர்…’ என அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி ச.அய்யாத்துரைப் பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில்,

‘‘தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் என்று வாழ்ந்து காட்டிய பசும்பொன் ஐயா உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் 115 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறான். துளி கூட சுயநலம் இன்றி நீதி, தர்மத்தை கடைபிடித்து தமிழ் சமுதாய முன்னேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அல்லும் பகலும் பாடுபட்டவர் பசும்பொன் ஐயா என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

ஜாதியையும், நிறத்தையும், பார்ப்பவன் அரசியலுக்கும் லாயக்கில்லை, ஆன்மீகத்திற்கும் லாயக்கில்லை. ஜாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் பொருளே இல்லை என்ற தெய்வவாக்கு பசும்பொன் ஐயா கூறியது. பசும்பொன் ஐயா அவர்கள் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு ஏழை எளிய மக்களுக்கு தன் குடும்ப சொத்தை வாரி வழங்கினார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

பசும்பொன் ஐயா உ.முத்துராமலிங்க தேவர் போல் ஆயிரம் வருடத்திற்கு முன்பு ஒருவன் பிறந்ததும் இல்லை. இனியும் ஆயிரம் வருடத்திற்கு பின்பும் யாரும் பிறக்கவும் முடியாது என்று முழங்கியவர் புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் சட்டமன்றத்தில் ஒரு அருந்ததியர் முயற்சியில் பசும்பொன் ஐயா அவர்களின் திருஉருவப்படத்தை திறந்து வைத்தவர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர்.

பசும்பொன் தேவர் அவர்களின் ஜெயந்தி விழாவிற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும்பசும்பொன் வந்து மரியாதை செலுத்துகிறார்களே ஏன்?
சற்று சிந்தித்துப் பாருங்கள்!
என் அன்பிற்குரிய மக்களே தயவு செய்து சிந்தியுங்கள். சிந்திக்க வேண்டிய நேரமும், கட்டாயமும், வந்துவிட்டது.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு செய்யப்படும் அரசியல் சுழலில் சிக்கி கொள்ளாதீர்கள், அரசியல் சூழ்ச்சிக்கு பழிக்கடா ஆகி விடாதீர்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அப்பழுக்கு இல்லாத ஒரே கட்சி. ஏழை, எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கருணை உள்ளம் கொண்ட புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

ஏழை, எளிய மக்களின் நலன் கருதி நல்லாட்சி புரிந்தவர் புரட்சித்தலைவர் அவருக்கு பின்பு பல்வேறு சோதனைகள் மற்றும் தீய சக்தியை முறியடித்து மீண்டும் புரட்சித்தலைவர் ஆட்சியை நிறுவி திறம்பட வீரத்துடனும், விவேகத்துடனும் யாருக்கும் அடிபணியாமல் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்தவர் புரட்சித்தலைவி என்பதை அனைவரும் அறிவீர்கள்.

வட இந்தியாவில் வேலை செய்தபொழுது வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தென்மாவட்டம் வரும்பொழுது இங்குள்ள ஏழை, எளிய மக்களின் ஏழ்மையை பார்த்து மனம் வெதும்பி பல நேரங்களில் வருத்தப்பட்டு இருக்கிறேன். இந்த மக்களின் வாழ்வில் எப்போது ஏற்றம் கிடைக்கும் என்று இறைவனை கேட்டிருக்கின்றேன். நான் தனி மனிதனாக உழைத்து என் குடும்பத்தையும் பராமரித்து ஏழை, எளிய மக்களுக்கு ஒரு அளவு தான் உதவி செய்ய முடியும். என்ற காரணத்தால் ஏதாவது, ஒரு அரசியல் கட்சியில் இணைந்து அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு நன்கு உதவலாம் என்று எண்ணித்தான் அரசியலுக்கு வந்தேன். ஒரு கட்சியில் இணைந்த நாள் முதல் அனைத்து சொந்த வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு மிக தீவிரமாக அந்த கட்சிக்கு உழைத்தேன். உடல் உழைப்பு மட்டுமல்லது வேர்வை சிந்தி உழைத்த பணத்தையும் செலவு செய்தேன். அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் அதன் மூலம் தென் மாவட்ட மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், அந்த கட்சி உழைப்பை மட்டும் உறிஞ்சி கொண்டு முக்குலத்தோருக்கு இடம் இல்லை என உதறித் தள்ளி விட்டது.

இன்றைக்கு ஈழம், சிரியா, காஷ்மீர், லெபனான் போன்றவை நமக்கு கற்றுத் தந்த தந்து கொண்டிருக்கும் பாடம் தான் என்ன? நான் மிக உறுதியாக சொல்கிறேன் தமிழகத்தின் தென்மாவட்ட அப்பாவி மக்களுக்கு எதிராக மிகப்பெரிய சதி வலை ஒன்று பல கரங்களால் பின்னப்பட்டு வருகிறது. தென் மாவட்டத்தில் குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் இன்று வரை எந்த தொழிற்சாலைகளும் இல்லை. வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் தீவிரவாதத்தின் பக்கம் மிக எளிதாக திரும்புவார்கள்.

இப்பொழுது இருப்பதை விட மிக அதிக அளவில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பார்கள் சொற்ப காசுக்காக எதையும் செய்ய இளைஞர்கள் தயாராகி விடுவார்கள் இன்றைக்கு கிடைக்கும் காசுக்காகவும், குடிக்கவும் அவர்கள் கொஞ்ச நாள் பழகிவிட்டால் பின்னர் மீட்க முடியாது. இதைத்தான் இன்றைக்கு இன்றைய ஆளுங்கட்சி தென் மாவட்டத்தில் குறிப்பாக ஒரு சமூகத்திற்கு எந்தவித பிரதிநிதித்துவம் கொடுக்காமல் அந்த சமுதாயத்தை அழிக்க நினைக்கிறது அதைக் கேட்க நாதியில்லை.

சவுதி, கத்தார், துபாய், போன்ற நாடுகளில் தீவிரவாதம் 90 சதவிகிதம் இல்லை. அதற்கு காரணம் அங்கு தொழிற்சாலைகள் இருக்கின்றன. நம்மை அடிமையாக்க ஒரு கூட்டம் சுற்றி வருகிறது பலிக்கடா ஆக வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் அய்யாத்துறை பாண்டியன்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal