முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ள முதுகுவலி பிரச்னையால், இன்று பசும்பொன் செல்ல இருப்பதை ரத்து செய்திருக்கிறார்.
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நாளை நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (சனிக்கிழமை) மாலை மதுரை செல்ல ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதுகுவலி காரணமாக முதலமைச்சர் நேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். நீண்ட பயணங்களை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.