தமிழ்நாட்டில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகள் கனமழை பெய்யும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சி அலர்ட் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பின. தென்மேற்குப் பருவமழை காலம் நிறைவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் வட கிழக்கு பருவமழை காலம் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழைக் காலத்தின் 4 வது நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா பிரதேசம், ஏனாம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல் கேரளா, மாஹே, ராயலசீமா பகுதிகளில் பரவலான இடங்களில் மழை பெய்யும் என்று எச்சரிகப்பட்டு உள்ளது.
அதே நாளில் கடலோர ஆந்திரா, ஏனாம், ராயலசீமா, கேரளா, மாஹே, தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த நாளில் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறி தமிழ்நாட்டிற்கும் கடலோர ஆந்திராவுக்கும் வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதேபோல் வடகிழக்கு பருவமழை காலத்தின் 5 வது நாளான நவம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா பிரதேசம், ஏனாம் ஆகிய பகுதிகளில் கனமழையும், கேரளா, மாஹே, ராயலசீமா ஆகிய பகுதிகளில் பரவலான இடங்களில் மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.