முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்த சென்றார் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயக்குமார்.

அப்போது, ‘ஐயா இ.பி.எஸ். வாழ்க… ஐயா இ.பி.எஸ். வாழ்க…’என கோஷம் போட்டதால், தேவரின் பக்தர்கள் கொந்தளித்துப் போனார்கள். உடனயாக, ‘நீ அமைச்சரா இரு… எது வேனாலும் இரு… இங்க சத்தம் போடாத… ஓடிப் போயிரு…’ என கொந்தளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் வரும் வழியிலும் ஆர்.பி.உதயக்குமாருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal