அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே, ‘ராகுல் காந்தியின் பாத யாத்திரை நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கும்’ என்று பேசியிருக்கிறார்!

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:- ‘‘இது எனக்கு உணர்ச்சிகரமான தருமணமாகும். தொழிலாளியின் மகனாக, சாதாரண தொழிலாளியான என்னை கட்சியின் தலைவராக்கியதற்காக காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றியை கூறி கொள்கிறேன்.

நாடு தற்போது பொய் மற்றும் வஞ்சக அரசியலை பார்க்கிறது. பொய் அரசியலுக்கு எதிராக போராடுவோம். கட்சியில் இணையாமல் ஜனநாயகத்தை காப்பாற்ற விரும்பும் மக்கள் எங்களுடன் கைகோர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். காங்கிரசால் நிறுவப்பட்ட ஜனநாயக அமைப்பை மாற்ற இன்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் காங்கிரசின் சித்தாந்தம் இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படையில் உள்ளது. இது கடினமான நேரம் என்பது எனக்கு தெரியும். உள்கட்சி ஜனநாயகம் கொண்ட ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. தேர்தல் அதை நிரூபித்தது. ராகுல்காந்தி பாத யாத்திரை சிறப்பானது. இது நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கிறது. காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ராகுல்காந்தி மக்களிடம் நேடியாக பேசுகிறார். பிளவுபடாத இந்தியாவை விரும்பும் மக்களை அவர் திரட்டுகிறார்’’ இவ்வாறு கார்கே பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal