தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக தலைமைக்கு தகவல் போனதால், தீபாவளி பண்டிகையையொட்டி உடன் பிறப்புக்களை உற்றசாகத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம் தி.மு.க. தலைமை!

அப்படி என்ன உற்சாகத்தில் உடன் பிறப்புக்கள் இருக்கிறார்கள் என்று அறிவாலய வட்டாரத்தில் விசாரணையில் இறங்கினோம்.

‘‘சார், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஒரு சில ஒன்றியச் செயலாளர்கள் கல்லா கட்டினார்களே தவிர, அடிமட்டத்தில் இருக்கும் கிளைக்கழக நிர்வாகிகள், நகரம் ஆகியவர்கள் கடுமையான வருத்தத்தில் இருந்தனர்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதால், உடன் பிறப்புக்களை உற்சாகப்படுத்த தி.மு.க. தலைமை முடிவு செய்தது. அதன்படி, மாவட்டச் செயலாளர்கள் மூலம் ஒன்றியச் செயலாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், நகரம், கிளைக்கழக நிர்வாகிகளுக்கு ரூ.3 ஆயிரமும் தீபாவளி பண்டிகையையொட்டி வழங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி மூலமாக மாவட்டச் செயலாளர்கள் வழியாக மாதந்தோறும் ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகளை கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம். இதனால் உடன் பிறப்புக்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்’’ என்றனர்.

தி.மு.க.வும் கார்ப்பரேட் கம்பெனியாகிவிட்டதா..? என எதிர்க்கட்சிகளின் விமர்சனமும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal