ஓமலூர் அருகே சிறுவனை கடத்தி திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டில் பண்டித்து வந்த மாணவன் கடந்த ஏப்ரல் 6ம் தேதி கல்லூரிக்கு சென்ற நிலையில் திடீரென மாயமானார். நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றொர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, மகனை காணவில்லை என்று கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், அந்த மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் பெற்றோர் ஹேபியஸ் கார்பஸ் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து, அந்த மாணவனுடன் நட்பாக இருந்தது யார்? என போலீசார் விசாரிக்க தொடங்கினர். ஆனால், அந்த மாணவன் யாரிடமும் அதிகமாக பேசமாட்டான் என நண்பர்கள் தெரிவித்தனர். போலீசாரின் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரில் அந்த மாணவன் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போது அவருடன் இளம்பெண் ஒருவர் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அப்போது இருவரும் கல்லூரியில் படித்தபோது காதலில் விழுந்தது தெரியவந்தது. சூரியாவின் அழகில் அந்த மாணவி மயங்கினார். திருமணம் செய்துகொண்டு வாழலாம் என ஆசை வார்த்தை கூறினார். அந்நேரத்தில் அந்த கல்லூரி மாணவனுக்கு 18 வயது முடிய 3 மாதம் இருந்தது. அப்படி இருந்தத போதிலும் இவர்களது காதல் கண்ணை மறைத்தது. இதனையடுத்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் அவர்கள் வீடு வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியுள்ளது தெரியவந்தது. கல்லூரி மாணவன் வீட்டிலிருந்து மாயமான நேரத்தில் அவர் சிறுவன். எனவே சிறுவனை கடத்திச்சென்று திருமணம் செய்த கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குழந்தை திருமணம், சிறுவனை கடத்திச் சென்று உல்லாசமாக இருந்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

அந்த கல்லூரி மாணவி தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal