தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

வரும் அக்.24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இப்போது இருந்த பொதுமக்கள் கடைவீதிகள் துணிகள் வாங்குவது, பலகரங்களுக்கான பொருட்கள் வாங்குவது என்று குவிந்து வருகின்றனர்.அதேபோல் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதிலும் பொதுமக்கள் ஆர்வமாக இருப்பர். இதற்காக பல்வேறு மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகளுடன் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில் 40 பட்டாசு கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. வரையறுத்த விதிமுறைகளின்படி 10 அடி இடைவெளியில் ஒவ்வொரு கடையும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி நேர கட்டுப்பாட்டை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம்நேர கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. விபத்து, ஒலி மற்று மாசற்ற தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பட்டாசு வெடிப்பதால், சுற்றி இருக்கக் கூடிய நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபடாத வகையிலும், ஒலி மற்றும் காற்று மாசால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal