தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வந்த நிலையில், அப்பதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது தங்கை கனிமொழிக்கு கொடுத்து அழகு பார்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

லோக் சபாவிலும் சரி… ராஜ்ய சபாவிலும் சரி… தனக்கான தனித்துவத்தை நிலைநாட்டியிருக்கிறார் கனிமொழி எம்.பி., சங்கமம் நிகழ்ச்சி தொடங்கி பல்வேறு பணிகளை திறம்பட நடத்தியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, லோக்சபா எம்.பி.,க்கள் 17 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.,யுமான, கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து பெற்றார்.

அதே போல் தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி நியமனம் செய்யப்பட்டதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கலைஞர் இருந்திருந்தால் எதைச் செய்திருப்பாரோ… அதை தளபதி செய்து முடிக்கப் போகிறார் என்று மூத்த அமைச்சர்கள் சிலரே அறிவாலயத்தில் பேசிக்கொள்வதை கேட்க முடிகிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal