சமீபத்தில் துணைப்பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் சுப்புலட்சுமி ஜெகதீசன். அந்தப் பதவி யாருக்கு கொடுப்பது என்ற பட்டிமன்றே அறிவாலயத்தில் நடந்தாலும், கனிமொழிக்கு கொடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் அறிவாலயத்திற்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த வழக்கறிஞரும், முசிறி நகர மாணவரணி துணை அமைப்பாளருமான தங்க கோபிநாத் அறிவாலயத்திற்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில், ‘தமிழர்களின் நினைவில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓய்வறியா சூரியன் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வழியில் தமிழர்களையும், தமிழினத்தையும் காப்பதற்காக முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ஓய்வறியாமல் உழைத்து வருகிறீர்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் உங்களின் அன்பு கட்டளையை ஏற்று மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டு, கழகத்தின் வெற்றிக்காக பாடுபட்டவர் பெண்ணுரிமை போராளி கனிமொழி எம்.பி.! அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கினால், உங்களுக்கும் கழகத்திற்கும் மேலும் வலுசேர்க்கும்…’’ என்று நீள்கிறது அந்த கடிதம்!

இதே போல், தமிழகம் முழுவதிலும் இருந்து கடிதங்கள் அறிவாலயத்திற்கு குவிந்து வருவதாக, சீனியர் தலைவர்களே தங்களுக்குள் பேசிக்கொள்வதையும் கேட்க முடிகிறது..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal