கடலுர் மத்திய சிறையில் உள்ள பத்திரிகையாளர் ‘சவுக்கு’ சங்கர், உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்தவர் சங்கர். நீதித்துறை குறித்து அவதூறாக பேசியதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், மதுரை கோர்ட் அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தது. பணியில் இருந்தும் நீக்கப்பட்டார். கடலூர் மத்திய சிறையில் கடந்த 16ம் தேதி அடைக்கப்பட்ட அவரை, பார்க்க பார்வையாளர்கள் அதிகம் வருவதால், ஒரு மாதம் பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அதை கண்டித்தும், தடையை நீக்க வலியுறுத்தியும் கடந்த 30ம் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். நான்காம் நாளான நேற்று, உண்ணாவிரதத்தை அவர் வாபஸ் பெற்றார். பார்வையாளர்களை சந்திக்க அனுமதி மறுப்பை ரத்து செய்யக்கோரி அவர் வழங்கிய கடிதத்தை பெற்ற சிறை நிர்வாகம், கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதியளித்ததை ஏற்று, உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.