தென்காசியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மருமகளை கழுத்தை நெரித்து கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த லாலாகுடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த இசக்கிராஜ் சற்று மனநிலை சரியில்லாதவர் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவரது முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்று சென்று விட்டார். இதன்பின் இவர் மத்தளம் பாறை கிராமத்தைச் சேர்ந்த பத்மாவதி (30) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

பத்மாவதி கட்டளைக் குடியிருப்பில் உள்ள தனியார் குடை தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அவருடன் வேலை செய்து வரும் நபர் ஒருவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அவரின் நடத்தை காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், பத்மாவதியை அவரது மாமனார் முருகேசன் (55) கண்டித்துள்ளார். பலமுறை கண்டித்தும் பத்மாவதி கேட்காததால் நேற்று, பத்மாவதி வீட்டில் இருந்தபோது அவரை கழுத்தை நெரித்தும் தலையணையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்துள்ளார்.

இதுதொடர்பாக புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அதே கிராமத்தில் தலைமறைவாக இருந்த மாமனார் முருகேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal