தமிழக அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் இளம் வயதான அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பல்வேறு புதுமையான திட்டங்களை புகுத்தி செயல்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில்தான், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சலால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்குமாறு அமைச்சருக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விரைவில் பூரணமாக குணமடைந்து, பணியை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி மாணவர்களும், அவரது ஆதரவாளர்களும் வேண்டிக்கொண்டிருக்கின்றனர்!