மதுரையில் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிக்கும் காட்சிகள், உடை மாற்றும் காட்சிகளை போட்டோ, வீடியோக்கள் எடுத்து கமுதி டாக்டருக்கு அனுப்பிய அதே விடுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அனுப்பிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (வயது 31). இவர் எம்பிபிஎஸ் படித்து முடித்துவிட்டு கமுதியில் முஸ்லீம் பஜாரில் கிளினிக் நடத்தி வருகிறார். டாக்டர் ஆசிக் என்பவருக்கு திருமணமாகி 3 ஆண்டாகிவிட்டது. இவரது கிளினிக் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் பி.எட்., படித்து வருகிறார். இவருக்கும், கமுதியைச் சேர்ந்த டாக்டர் ஆசிக் என்பவருக்கும் பல ஆண்டாக நட்பு இருந்துள்ளது.

இதற்கிடையில் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து படித்துவரும் காளீஸ்வரி, உடன் தங்கியுள்ள மற்ற பெண்களின் குளியல் அறை காட்சிகள், உடைகள் மாற்றும் காட்சிகளை புகைப்படம் மற்றும் வீடியோக்களாக எடுத்து டாக்டர் ஆசிக் என்பவருக்கு அனுப்பிவந்துள்ளார். இப்படி போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்து அனுப்புவதை பார்த்த பெண் ஒருவர், விடுதி காப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அவர், காளீஸ்வரியின் செல்போனை பார்த்தபோது அதுபோன்ற போட்டோக்கள், வீடியோக்கள் நிறைய இருந்துள்ளன.

இதையடுத்து விடுதி மேலாளர் மதுரை அண்ணாநகர் போலீஸில் புகார் தெரிவித்தார். அங்கிருந்து சைபர் கிரைம் போலீஸாருக்கு புகார் மாற்றப்பட்டு, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்கை விசாரித்துவந்தார். போலீஸாரின் விசாரணையில் ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் அனுப்பியது உண்மை எனத் தெரிந்தது.

இதனால், டாக்டர் ஆசிக், மாணவி காளீஸ்வரி ஆகிய இருவரையும் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal