கடந்த சில தினங்களாக பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் அவரது கார், வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலத்திலும், குமரியிலும் மீண்டும் குண்டு வீசிய சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ளது பரமக்குடி நன்னுசாமி தெரு. இங்கு வசித்து வருபவர் ராஜன். இவர் சாமி சிலைகள் செய்து கொடுத்து வரும் தொழில் செய்து வருகிறார். இவர் ஆர் .எஸ். எஸ் .இயக்கத்திலும் உள்ளார். நேற்று இரவு ராஜன் வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு வாலிபர்களின் வந்து மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்ற வைத்து ராஜன் வீட்டு முன் பகுதியில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் கதவில் பட்டு கீழே விழுந்துவிட்டது. இதனால் தீப்பிடிக்க வில்லை. இந்த சம்பவம் குறித்து ராஜன் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார் இதன் பேரில் துணை கமிஷனர் மாடசாமி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் ராஜன் வீட்டு முன்பு கிடந்த மண்எண்ணை பாட்டலை கைப்பற்றி எடுத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.

ராஜன் வீட்டு அருகே உள்ள சிசிடிவி கேமராவில் இரண்டு வாலிபர்கள் வந்து செல்வது பதிவாகி உள்ளது. இவர்கள் யார் என்று தற்போது விசாரணை நடக்கிறது. மண்ணெண்ணெய் குண்டு வீசியதை அடுத்து தற்போது ராஜன் வீட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்திலும் பா.ஜ., பிரமுகர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal