எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும் என்றும், அப்போது திமுகவினரை விடமாட்டேன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி சூளுரைத்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும் என்றும், அப்போது திமுகவினரை விடமாட்டேன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி சூளுரைத்துள்ளார். சமீபத்தில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து விட்டு வந்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘அதிமுக உயிரோட்டமுள்ள ஒரு காட்சி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்டாலின் ஆனாலும் எதுவும் செய்ய முடியாது என்று அவருக்கே தெரியும்.

அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து திமுக பழிவாங்கி வருகிறது. ஆனால் திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் வேகம் காட்டப்படுவதில்லை அதேபோல அதிமுக கொண்டு வந்த திட்டங்களை அரசியல் பார்க்காமல் திமுக அரசு செயல்படுத்த வேண்டும், மடிக்கணினி திட்டங்களை தொடர வேண்டும்.

அதிமுகவினரை பழி வாங்குவதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்யுங்கள். எனக்கு கிடைத்த நான்காண்டு ஆட்சியில் நான் மக்களுக்காக நல்லது செய்தேன். அப்போது எதிர்க்கட்சியினர் யாரையுமே பழிவாங்கவில்லை, நீங்கள் இப்போது கோடு போட்டால் நாங்கள் அதில் ரோடு போடுவோம்.

மீண்டும் அதிமுக ஆட்சி அமையும், அப்போது திமுகவினரை விடமாட்டேன் என்றார். மேலும் பெற்றோர்களே இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் திமுக அரசு முடக்கி வைத்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலையை பிற மாநிலங்கள் குறித்த போதும் தமிழ்நாடு அரசு குறைக்கவில்லை, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, நான் சொல்கிறேன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலும் நடக்க வாய்ப்புள்ளது’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal